சிதைந்த வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை !
காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் சிதைந்த வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை எழுத்துள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-05 05:29 GMT
பழுது அடைந்த வாகனம்
காரைக்குடி தாலுகா அலுவலகம் அருகே டி.எஸ்.பி., அலுவலகம், வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் ஸ்டேஷன், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகத்தில் கனிமவள திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக மழையிலும் வெயிலிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் துருப்பிடித்து வீணாகி வருகிறது. மேலும், தாலுகா அலுவலகம் பின்புறம் பல ஆயிரம் யூனிட் மணல் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. தாலுகா அலுவலகத்தின் முன்புறமும் பின்புறமும் வாகனங்கள் துருப்பிடித்து முற்றிலும் சிதிலமடைந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. பயன்பாடின்றி பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிதிலமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.