திண்டுக்கல்லில் செயற்கை புல் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை !
திண்டுக்கல்லில் செயற்கை புல் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஃபுல் ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என மனிதநேய செம்மல் தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் ஞானகுரு கோரிக்கை வைத்துள்ளார். திண்டுக்கல் கலெக்டர் மற்றும் அரசுக்கு அவர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பின்புள்ள விளையாட்டு மைதானம் ஹாக்கி விளையாட்டுக்காக உருவாக்கப்பட்டது.
இந்த மைதானம் 1964 ஆம் ஆண்டு திண்டுக்கல் அப்போதைய நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.10,000க்கு புறம்போக்கு இடங்கள் வாங்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த மைதானத்தில் உருவாக்க பெறும் முயற்சி எடுத்தார். இந்நிலையில் இந்த மைதானத்தில் செயற்கை ஃபுல் தேசிய ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதற்காக பல போராட்டங்களையும் நடத்தி உள்ளோம்.
பல அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளோம். திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஏராளமான வீரர்கள் வீராங்கனைகள் ஹாக்கி விளையாடி வருகிறார்கள். அவர்கள் மாநிலம் மற்றும் தேசியப் போட்டிகளில் பங்கேற்று சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாண்புமிகு அமைச்சர் ஐ பெரியசாமி தலையிட்டு உடனடியாக செயற்கைப்புல் ஹாக்கி மைதானத்தில் உருவாக்க வேண்டும். இது திண்டுக்கல் மக்களின் ஒரு கனவு திட்டமாகும். இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.