இரு சக்கர வாகனத்தில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு
ஈரோடு அருகே இருசக்கர வாகனத்திற்குள் கட்டு விரியன் பாம்பு புகுந்ததால் பரபப்பு ஏற்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 11:48 GMT
கட்டு விரியன்
ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகே உள்ள ராதாகிருஷ்ணன் விதியைச் சேர்ந்தவர் கனக சபை .ராதாகிருஷ்ணன் வீதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள புற்களை சுத்தம் செய்து வந்தபோது பூற்களுக்குள் இருந்து பாம்பு ஒன்று திடீரென்று கனகசபை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள் சென்று பதுங்கி கொண்டது. இதனை அடுத்து கண்ட தூய்மை பணியாளர்கள் இது குறித்து கனகசபையிடம் தெரிவிக்க மெக்கானிக் உதவியுடன் வாகனத்தின் அனைத்து பகுதிகளையும் பிரித்து ஒரு மணி நேரம் தேடிய பிறகு பாம்பு பிடிபட்டது .