இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு!
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா லாரி டிரைவர், ராஜா தான் மறவன் இடத்தில் வேலை பார்க்கும் லாரி செட்டில் தனது இருசக்கர வாகனத்தை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நிறுத்திவிட்டு லாரியில் தொழிலுக்காக வெளியூர் சென்று விட்டு இன்று திரும்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு செல்வதாக செல்வதற்காக இருசக்கர வாகனத்தை லாரி செட்டில் இருந்து எடுத்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே வந்து கொண்டிருக்கும்போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகன ஓட்டுனர் ராஜாவின் இருசக்கர வாகனத்தில் பாம்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பதறிய ராஜா தனது இருசக்கர வாகனத்தை சாலை ஓரத்தில் கீழே சரித்து பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த சில இளைஞர்களும் சேர்ந்து பாம்பை தேடினர் அரை மணி நேர தேடலுக்கு பின்பு இருசக்கர வாகனத்தில் உள்ளே பதுங்கி இருந்த பச்சை பாம்பு ஒன்றை பிடித்தனர்.
பின்னர் பிடிக்கப்பட்ட பச்சை நிற பாம்பை ஒரு பாட்டிலில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து தனது வண்டியில் பதுங்கி இருந்த பாம்பு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ராஜா நிம்மதி அடைந்தார். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.