இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் சிறப்பு களச் செயல்பாடு !

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் சிறப்பு களச் செயல்பாடு நாளை அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது.

Update: 2024-02-23 11:57 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில், பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் சிறப்பு களச் செயல்பாடு நாளை அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட 80 அலுவலர்களுக்கு, ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தனித்தனியாக 10 முதல் 15 இடைநின்ற மாணவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மாணவர்களை ஒவ்வொரு அலுவலர்களும் நேரில் சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணம் அறிந்து, குறைகளை நீக்கி, மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்க உள்ளனர். பள்ளி கல்வியில் சிறப்பான தேர்ச்சி சதவீதமுடைய விருதுநகர் மாவட்டத்தில், இடையிற்றல் இல்லா மாவட்டமாக மாற்ற அலுவலர்களின் இந்த கள செயல்பாட்டிற்கு, பெற்றோர்கள்கள், முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News