சேலத்தில் 1,300 மீட்டர் நீள துணியை கைகளால் பையாக தைத்த மாணவி

சேலத்தில்1,300 மீட்டர் நீள துணியை கைகளால் பையாக தைத்த மாணவி கலாம் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார்.

Update: 2024-02-18 08:45 GMT

சாதனை படைத்த மாணவி

சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா. இவருடைய மகள் கவுசிகா (வயது 13). இவர் சேஷாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கவுசிகா சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும்,

பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 1,300 மீட்டர் நீளம் கொண்ட துணியை பயன்படுத்தி 6 ஆயிரத்து 900 சதுர அடியில் துணிப்பையை கைகளால் தைத்து கலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார். இதுகுறித்து மாணவி கவுசிகா கூறும் போது, ‘பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் காலநிலை மாற்றமும் அவ்வப்போது வருகிறது.

குறிப்பாக சுற்றுலா தலம் மற்றும் மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதால் நீர்நிலைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து பழைய முறைகளில் துணிப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 6,900 சதுர அடியில் துணிப்பையை கைகளால் தைத்து கலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனையை செய்தேன்’ என்றார்.

சாதனை செய்த மாணவியை துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி உள்பட பலர் பாராட்டினர். மாணவி கவுசிகா ஏற்கனவே ஜி-20 மாநாடு லோகோவை 5,200 சதுர அடி அளவில் கோலங்களால் வரைந்து சாதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News