ரயில் மீது ஏறி செல்பி எடுத்த மாணவர் மின்சாரம் தாக்கி பலி

ரயில் மீது ஏறி செல்பி எடுத்த மாணவர் மின்சாரம் தாக்கி பலி;

Update: 2024-06-20 05:49 GMT
ரயில் மீது ஏறி செல்பி எடுத்த மாணவர் மின்சாரம் தாக்கி பலி

கவின் சித்தார்த்

  • whatsapp icon
திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் தெரு, விவேகானந்தா அவென்யு பகுதியைச் சேர்ந்தவர் கவின் சித்தார்த், 19. இவர் தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, கவின் சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் மூவர் தண்டையார்பேட்டையில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்தனர். அங்கிருந்து அருகில் உள்ள தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகர் ரயில்வே யார்டுக்கு சென்று மொபைல் போனில் 'செல்பி' படம் எடுத்தனர். பின், வீடியோ ரீல்ஸ் எடுப்பதற்காக, அங்கு நிறுத்தி இருந்த பெட்ரோல் டேங்கர் ரயில் மீது கவின் சித்தார்த் ஏறினார். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்சார கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் துாக்கி வீசப்பட்ட கவின் சித்தார்த், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அனுராஜ் கவுதா, 28, கொடுத்த தகவலின்படி, போலீசார் விரைந்து வந்தனர். உடலை மீட்டு, போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News