பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டப்படுள்ள குப்பையில் திடீர் தீ விபத்து

பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் வேலூர் பேரூராட்சி நிர்வாகம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் திடீரென தீ பற்றி எறிந்து சாலை முழுவதும் புகை மூட்டமானது.

Update: 2024-07-10 09:54 GMT

தீ விபத்து 

நாமக்கல் மாவட்டம்,, பமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தின் அருகில் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் வேலூர் பேரூராட்சி நிர்வாகம் வேலூர் பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை இந்த பகுதிகளில் கொட்டி வருகின்றனர். மேலும் வேலூர் பகுதிகளில் உள்ள உணவகங்கள்,டி கடைகள்,சாலையோரக் கடைகள்,இறைச்சி கடைகள் உள்ளிட்டவைகளில் இருந்து கொட்டப்படும் கழிவுகள் அப்பகுதியில் மலை போல் குவிந்து உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் தீ பற்றி எறிய தொடங்கியது. தீ பற்றி எறிந்ததில் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் எழும்பி சாலையில் வாகனத்தில் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாள்யத்தில் உள்ள தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயனைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமலும் புகை அப்பகுதிகளில் பரவாமலும் கட்டுப்படுத்தனர். இதனால் அப்பகுதியில் வானத்தில் சொல்வோர் புகை மூட்டத்தால் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது தாங்கள் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பேரூராட்சி பணியாளர்களை நியமித்து தொடர்ந்து கண்காணித்து வந்தோம் இந்த நிலையிலும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து சென்று விட்டனர் என தெரிவித்தனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கபடும் எனவும் தீ வைக்கும் மர்ம நபர்கள் யார் என்று தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News