காரைக்குடியில் கடும் வெயிலுக்கு தையல் தொழிலாளி பலி
காரைக்குடியில் கடும் வெயிலுக்கு தையல் தொழிலாளி பலியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
Update: 2024-06-03 11:53 GMT
காரைக்குடியில் கடும் வெயிலுக்கு தையல் தொழிலாளி பலியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
காரைக்குடி பாரதிநகர் 5வது வீதியை சேர்ந்தவர் தையல் தொழிலாளி இருதயராஜ் (வயது 80). இவர் தெருத்தெருவாக தையல் மிஷினை எடுத்து சென்று தையல் தைத்து வரும் நிலையில் காரைக்குடியில் வெயிலின் தாக்கம் அதிகமானதால் அங்குள்ள ஒரு கடை ஓரத்தில் மிஷினை நிறுத்திவிட்டு எதிரில் இருந்த படிக்கட்டில் அமர்ந்தவர் அப்படியே வெயில் தாளாமல் உயிரிழந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவரது குடும்பத்தினர் அவரது உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். வெயிலுக்கு தையல் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.