திருக்கோவிலூரில் நூதன முறையில் ஓவியம் வரைந்த ஆசிரியர்
திருக்கோவிலூரில் நூதன முறையில் ஆசிரியர் ஓவியர் வரைந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்,
மக்கள் மனதில் வாழ்வீர்கள் கேப்டன் விஜயகாந்த் என்ற வார்த்தைக்கு ஏற்ப தன் "மனதாலேயே" விஜயகாந்த் உருவத்தை வரைந்தார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தன் மறைவால் தமிழகத்தில் சாதி, மத, அரசியல்,
கொள்கை என எந்த வேறுபாடுமில்லாமல் அனைவரின் அன்பையும், இறங்களையும் ஒட்டுமொத்தமாய் ஒரு மனிதர் சம்பாதித்து வைத்திருப்பது அசாத்தியமானது. ஒருவருக்கு பிடித்த அரசியல் தலைவர் இன்னொருவருக்கு பிடிக்காது. ஒருவருக்கு பிடித்த நடிகர் இன்னொருவருக்கு பிடிக்காது. அனைவருக்கும் பிடித்த மனிதராக விஜயகாந்த் வாழ்ந்து காட்டியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்து விதமாகவும், மக்கள் மனதில் என்றும் வாழ்வீர்கள் கேப்டன் என்ற வாசகத்துக்கு ஏற்ப ஓவிய ஆசிரியர் செல்வம் தன் மனசில் மனசு குறிக்கும் நெஞ்சுப் பகுதியில் மனசுக்கு நேராக ஒரு சிறுகம்பி வளைத்து வைத்து அதில்
மார்க்கர் பென் கொண்டு "மனதாலேயே" கேப்டன் விஜயகாந்த் உருவத்தை ஐந்து நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.