பெருமாநல்லூர் அருகே மோட்டார் இயக்கும்போது கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு

திருப்பூர் பெருமாநல்லூர் காளம்பாளையத்தில் காலணி வழுக்கி கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியானார்.;

Update: 2024-06-15 11:46 GMT

காவல் நிலையம்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் நடராஜ். விவசாயி, இவர் மகன் அஸ்வின் குமார் (வயது25) இவர்களுக்கு வடக்காலத் தோட்டம் என்ற இடத்தில் விவசாய நிலம் உள்ளது.

அங்குள்ள கிணற்றில் அஸ்வின் குமார் வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்ச அஸ்வின் குமார் சென்றார். அங்கு மோட்டாரை இயக்கும்போது கால் செருப்பு வழுக்கி கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

Advertisement

இவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் தோட்டத்திற்கு சென்ற மகன் திரும்பி வராததால் நடராஜ் தேடி சென்றார். அப்போது கிணற்றில் அஸ்வின் குமார் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீமனயணைப்புதுறையினர் வந்து அஸ்வின் குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News