சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
கூடங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.;
Update: 2024-06-02 08:03 GMT
ஸ்ரீ ராம்
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி ஸ்ரீ ரெகுநாதபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ ராம் என்ற வாலிபர் கூடங்குளம் அருகே நேற்று (ஜூன் 1) இரவு வேலைக்கு சென்று விட்டு வரும் வழியில் இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.