திருமணம் ஆகவில்லையே! விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்..
திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்.;
Update: 2024-03-02 09:06 GMT
உடற்கூறு ஆய்வு
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள காருடைய பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ்குமார் வயது 41. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று விரக்தியில் வாழ்ந்து வந்தார் சதீஷ்குமார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கரூர் அடுத்த ஆத்தூர் பிரிவு, திருமால் நகர், நாலாவது கிராஸ் பகுதியில் வசித்து வரும் அவரது சகோதரர் முருகேசன் வீட்டில் இருந்து வந்தார். பிப்ரவரி 29ஆம் தேதி காலை 11:30 மணி அளவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த சதீஷ்குமாரின் தந்தை ராமசாமி, இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த சதீஷ்குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.