ஆவடி அருகே வயலில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி வாலிபர் உயிரிழப்பு
ஆவடி அருகே வயலில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி வாலிபர் உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-10 14:12 GMT
உயிரிழந்த வாலிபர்
ஆவடி திருநின்றவூர் அடுத்த பாக்கம் ராமநாதபுரத்தில் விவசாய நிலத்தில் பிரகாஷ் மற்றும் வீரமுத்து என்பவர்கள் பணி செய்து கொண்டிருந்தபோது மின் வயர் உரசி பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார் படுகாயம் அடைந்த வீரமுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விவசாய நிலத்தில் தாழ்வாக சென்ற மின் வயரை சரி செய்ய பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரியபாளையம் சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் போலீசார் சமரசம் ஏற்பட்டது பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்