உப்பளத்தில் சிக்கிய வட மாநில வாலிபர் மீட்பு !
ராஜாக்கமங்கலத்தில் உப்பளத்துக்குள் சிக்கிக்கொண்டு வாலிபர் தீயணைப்பு துறையால் மீட்கப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-20 11:45 GMT
வாலிபர் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பண்ணையூரில் உப்பளங்கள் உள்ளன. இன்று காலையில் அந்த பகுதியில் உள்ள மரைன் கல்லூரியின் பின்புறம் உள்ள உப்பளத்துக்குள் சிக்கிக்கொண்டு வாலிபர் ஒருவர் கூச்சலிட்டார். கழுத்தளவு தண்ணீரில் உயிருக்கு போராடியவாறு அந்த வாலிபர் காணப்பட்டார். கல்லூரிக்கு வந்த மாணவர்கள் சிலர் இதை பார்த்து உடனடியாக ராஜாக்கமங்கலம் போலீஸ் சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் இருந்து உதவிக்கோட்ட அலுவலர் தலைமையில் தீயணைப்பு துறையினர் சென்று அந்த வாலிபரை மீட்டனர். அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு (26) என்பது தெரிய வந்தது. இவர் ஏன் உப்பளப் பகுதிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. நேற்று இரவு உப்பளப் பகுதிக்குள் வந்ததாக கூறப்படுகிறது. அவர் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்த பின் விசாரணை நடத்தப்படும் என ராஜாக்கமங்கலம் போலீசார் கூறினர்.