வழிப்பறியில் ஈடுபட முயன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.
Update: 2023-11-20 07:08 GMT
புதுச்சேரி மாநிலம், பெரிய காலாப்பட்டு, பிரசாந்த் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் மணி( 23). இவர் விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பகுதியில் கத்தி மற்றும் உருட்டு கட்டையை காட்டி பொதுமக்களிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயன்றார். இவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் மணியை குண்டர் தடுப்பு சட் டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப் பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் மணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.