தென்காசி அருகே ரயில் மோதி சம்பவ இடத்தில் ஒருவர் பலி
தென்காசி அருகே ரயில் மோதி சம்பவ இடத்தில் ஒருவர் பலி. போலீசார் வழக்கு பதிவு விசாரணை.;
Update: 2024-04-24 05:54 GMT
பலி
தென்காசி அருகே உள்ள ரவண சமுத்திரம் மாலிக் நகரை சேர்ந்தவர் பிரம்ம நாயகம் (60) இவர் வீட்டு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நெல்லையில் இருந்து செங்கோட்டை சென்ற ரயிலில் எதிர்பாரவிதமாக மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தென்காசி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.