திருப்பத்தூரில் நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக சாலையில் முறிந்து விழுந்த மரம்! வாகன ஓட்டிகளை அவதி!

திருப்பத்தூரில் நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக சாலையில் முறிந்து விழுந்த மரம்! வாகன ஓட்டிகளை அவதியடைந்துள்ளனர்.

Update: 2024-07-13 05:07 GMT

மரம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக சாலையில் முறிந்து விழுந்த மரம் வாகன ஓட்டிகளை அவதி. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று நள்ளிரவு மிதமான மற்றும் கனமழை பெய்து வந்தது.

இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு இருந்ந மரம் ஒன்று திடீரென சாலையில் முறிந்து விழுந்தது. மேலும் இந்த வழியாகத்தான் 2க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் நீதிபதி குடியிருப்பு, தீயணைப்பு துறை அலுவலகம் மற்றும் குடியிருப்பு, உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன.

மேலும் ஒரு நாளைக்கு சுமார் 10,000 மேற்பட்ட வாகன ஓட்டிகள் வழியாக சென்று வருகின்றனர். எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதன் காரணமாக உடனடியாக நகராட்சி ஊழியர்கள் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

Tags:    

Similar News