ஒலித்த எச்சரிக்கை மணி - விமான நிலையத்தில் பரபரப்பு

திருச்சி விமான நிலையத்தில் பயணியின் உடைமைகளை சோதித்த போது வெடிகுண்டு எச்சரிக்கை மணி ஒலித்ததால் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Update: 2024-03-01 07:50 GMT

திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்திலிருந்து சாஜாவிற்கு நேற்று காலை 10:30 மணிக்கு யார் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்திருந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி முருகன் தனது உடைமைகளுடன் சோதனைக்கு வந்தபோது வெடிகுண்டு குறித்த எச்சரிக்கையாளரும் திடீரென ஒலித்தது.

இதைத்தொடர்ந்து உடனடியாக திருச்சி விமான நிலையம் உடைய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் செய்தனர். பின்னர் அந்த பயணியை தனியாக அழைத்துச் சென்று அவரது உடைமைகளை சோதனை செய்தனர் ஆனால் அவரது உடமையில் வெடிகுண்டு போன்ற எதுவும் கண்டறியப்படவில்லை இதனை தொடர்ந்து பல்வேறு சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படைவினர் வெடிகுண்டு காண எந்தவித முகாந்திரமும் இல்லாத காரணத்தினால் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதித்தினர். இந்த சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் திருச்சி விமான நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News