குமரியில் களை கட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குமரியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஞாயிறு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.

Update: 2023-12-25 11:26 GMT
கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி .

இயேசுநாதர் பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி உலக மக்களால் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில்  மறை மாவட்ட ஆயர் நரேன் சூசை கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினார். பின்பு இன்று காலையும்  அங்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது இது போன்று நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலயம், கன்னியாகுமாரி தூய உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம்  உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களில் நள்ளிரவு மற்றும் இன்று காலையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.        இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து சிஎஸ்ஐ ஆலயங்களிலும், பெந்தேகோஸ்தே சபைகள் என அனைத்திலும் ஞாயிறு இரவு இன்று காலை ஆராதனை நடைபெற்றன.

Tags:    

Similar News