சூளகிரி அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை

சூளகிரியை அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள சுப்பகிரி கிராமத்தில் விவசாய நிலத்தில் பயிரிடபட்ட நெற்பயிர் மற்றும் காலிஃபிளவரை ஒற்றை காட்டு யானை மிதித்து சேதப்படுத்தியது.

Update: 2024-04-05 04:58 GMT

சேதமடைந்த நெற்பயிர் 

 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி அருகேயுள்ள சுப்பகிரி என்னும் கிராமத்தில் விஜயகுமார் என்பவரது விவசாய நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் மற்றும் காலிஃபிளவர் உள்ளிட்டவை பயிரிட்டுள்ளார். நேற்று நள்ளிரவு சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை விளைநிலங்களில் புகுந்து பயிரிடப்பட்ட காலிஃப்ளவர் மற்றும் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி,மீண்டும் சானமாவு வனப்பகுதிக்குள் சென்றது.

இந்த நிலையில் தகவலை அறிந்த வனத்துறையினர் யானை மிதித்து சேதப்படுத்திய இடத்திற்க்கு சென்று விசாரணை நடத்தியதில், ஒற்றை காட்டு யானை சேதப்படுத்திய விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வனத்துறை வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.மேலும் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருக்கும் ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வன ஊழியர்களுக்கு கடும் சவாலாக உள்ள நிலையில், இன்னும் 2 தினங்களில் இந்த ஒற்றை காட்டு யானையை விரட்டியடிக்கபடும் என வனதுறை அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News