மர்மமான முறையில் உயிரழந்து வரும் காட்டெருமை
கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் காட்டெருமை மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-05-16 01:23 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் காட்டெருமை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து வனச்சரகர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த காட்டெருமையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அதில் வெளிப்பகுதியில் காயம் இல்லாத சூழ்நிலையில் எவ்வாறு இறந்தது என்பது குறித்து கால்நடை மருத்துவர் உதவியுடன் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து காட்டெருமையை புதைத்தனர், மேலும் இறந்த காட்டெருமை பெண் இனத்தை சேர்ந்தது என்றும் சினை மாடு எனவும் சுமார் 5 வயது மதிக்கத்தக்க காட்டெருமை எனவும் தெரியவந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அதன் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்குள் மட்டும் 5க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கொடைக்கானல் நகர்ப்பகுதியில் மர்மமாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.