சாத்தான்குளம் அருகே கார் மோதி பெண் சம்பவ இடத்திலேயே பலி

சாத்தான்குளம் அருகே கார் மோதி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;

Update: 2024-04-28 15:57 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தேர்க்கன் குளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாசானம் மனைவி உச்சிமாகாளி (55). அவரது கணவர் உடல்நலக்குறைவாக உள்ளார். இவர் நேற்று இரவு பேய்குளம் அருகே உள்ள பழனியப்பபுரத்தில் உள்ள தோட்டத்தில் அவரது மாமனார் சன்னியாசி (80) என்பவருடன் கடலை பறிக்க சென்றார் வேலை முடிந்ததும் இரவு 7 மணி அளவில் வீடு திரும்பினர்.

அப்போது ட்ரை சைக்கிளில் கடலைக் குலைகளை ஏற்றிக்கொண்டு மாமனார் சன்னியாசி சைக்கிளை தள்ளிக் கொண்டு வர அவரது பின்னால் உச்சிமாகாளி நடந்துவந்தார். தேர்க்கன் குளம் விலக்கில் வரும்போது எதிரே வந்த வெள்ளை நிற கார் உச்சி மாகாளி, சன்னியாசி ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. கார் மோதியதில் உச்சி மாகாளி தலையில் படுத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

சன்னியாசி லேசான காயத்துடன் தப்பினார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாமனார் சன்னியாசி அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்தது யார்? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News