குடும்பத் தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை!
தூத்துக்குடியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Update: 2024-06-25 12:32 GMT
தூத்துக்குடியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் ஜேசுராஜா இவரது மனைவி மாலையம்மாள் (40). இவர் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மற்றொரு சம்பவம்: திருச்செந்தூர் குமாரபுரத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் சுந்தரம் (72). இவரது மனைவி சங்கரம்மாள் கடந்த ஆண்டு உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டாராம். அதில் இருந்து மன வேதனையில் இருந்த சுந்தரம் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.