தென்காசி அருகே வளா்ப்பு நாய் கடித்து தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி அருகே வார்ப்பு நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2024-06-28 04:06 GMT

பைல் படம் 

தென்காசி அருகே நயினாரகரம் ஊராட்சிக்குள்பட்ட  துரைச்சாமிபுரத்தில் உள்ள காலனி தெருவைச் சோ்ந்தவா் முத்தையா (50 ). சலவைத் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், 3 மகள்கள் உள்ளனா். இவா்கள் வளா்த்துவரும் நாயை சில வாரங்களுக்கு முன்பு வெறிநாய் கடித்ததாம். இதனால், அந்த வளா்ப்பு நாய்க்கு வெறிபிடித்து, முத்தையாவை மூக்கு, வாய், முகம் உள்ளிட்ட பகுதிகளில் கடித்ததாகவும், அவா் சிகிச்சை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் அவருக்கு வாந்தி, குமட்டல் ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டதாம். இதில், மயங்கி விழுந்த அவரை உறவினா்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா் மேல்சிசிக்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags:    

Similar News