கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண் மாயம்
கீழையூர் அருகே கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற 19 வயது இளம் பெண் மாயம். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-08 05:48 GMT
கீழையூர் அருகே கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற 19 வயது இளம் பெண் மாயம் நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பிரதபராமபுரம் யாதவர் தெரு பகுதியில் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் சுந்தரமூர்த்தி சுந்தரமூர்த்தியின் அக்கா மகள் 19 வயதான பெண் இளம்பெண் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். சிறுவயதில் தாயார் இறந்து விட்டதால் அந்த இளம் பெண் தனது மாமா சுந்தர மூர்த்தி வீட்டில் தங்கி வளர்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி காலை 8 மணிக்கு கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அந்த இளம் பெண் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சுந்தரமூர்த்தி கீழையூர் காவல் நிலையத்தில் பிப்ரவரி ஏழு புதன்கிழமை காலை 11 மணிக்கு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.