கெங்கவல்லி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
கெங்கவல்லி அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-24 16:37 GMT
இளைஞர் கைது
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி சோப்பு மண்டி அகதிகள் முகாமில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கஞ்சா விற்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், விருதுநகர் மாவட்டம் குன்னூர் அகதிகள் முகாமை சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 27) என்பதும், நாகியம்பட்டி அகதிகள் முகாமில் தங்கி கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்