ரயில் முன் செல்ஃபி எடுத்த இளைஞர் பலி!

கோவில்பட்டியில் தண்டவாளம் அருகே ரயில் முன் செல்ஃபி எடுத்த இளைஞர் ரயில் மோதி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2024-05-02 06:34 GMT
ரயில் முன் செல்ஃபி எடுத்த இளைஞர் பலி!

பலி

  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வள்ளுவா் நகரைச் சோ்ந்த காந்தாரி மகன் மந்திரமூா்த்தி (29). இவா் கடந்த ஏப். 24ஆம் தேதி தனது நண்பா் செல்வமாரியப்பனுடன் கோவில்பட்டி வேலாயுதபுரம் சாலையில் உள்ள வசந்த நகா் பகுதியில் தண்டவாளம் அருகே மது குடித்தாராம். பின்னா் அவா் செல்ஃபி எடுத்தாராம். அப்போது, குருவாயூா் விரைவு ரயில் மோதியதில் அவா் காயமடைந்தாா். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் நேற்று உயிரிழந்தாா். இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News