இளைஞரிடம் இணையவழியில் ரூ. 26.26 லட்சம் மோசடி

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 26.26 லட்சம் மோசடி

Update: 2024-06-01 05:46 GMT

 மோசடி

தஞ்சாவூர் அருகே அய்யம்பேட்டையைச் சேர்ந்த நபரிடம் இணையவழியில் ரூ. 26.26 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வரும் 42 வயது நபருக்கு கடந்த ஏப்ரல் மாதம் பேஸ்புக் செயலியில் அடையாளம் தெரியாத மர்ம நபர் அனுப்பிய தகவல் வந்தது. அதில், இணையவழி மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வர்த்தகம் செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர் அதிலிருந்த கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவருடைய எண்ணை அது தங்களது வாட்ஸ் ஆப் குழுவில் மர்ம நபர்கள் இணைத்தனர். வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்த அவர் மர்ம நபர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொண்டார். அப்போது, மர்ம நபர்கள் கூறியபடி, இணைவழியில் பல்வேறு தவணைகளில் ரூ. 26.60 லட்சம் முதலீடு செய்தார். ஆனால், இதற்கான லாபத் தொகையாக ரூ.36 ஆயிரம் மட்டுமே கிடைத்தது.  இது தொடர்பாக அவர் மர்ம நபர்களைத் தொடர்பு கொண்டபோது, மேலும் தொகையை அனுப்பினால் லாபம் கிடைக்கும் எனக் கூறி வாட்ஸ் ஆப் குழுவிலிருந்து வெளியேறி விட்டனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் தஞ்சாவூர் இணையதளக் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News