ஆர்ப்பாட்டத்திற்கு மைக் செட் அமைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

ஆர்ப்பாட்டத்திற்கு மைக் செட் அமைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார்.

Update: 2023-12-07 12:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் அல்லம்பட்டி அனுமன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு கனிராஜன் (28). கனிராஜுக்கு திருமணம் ஆகாத நிலையில் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறார். மேலும் கனிராஜ் கூலி வேலை செய்து வந்த நிலையில் தற்போது டாட்டா ஏசி ஓட்டுனராகவும் மற்றும் மைக் செட் அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கனிராஜ் இன்று விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மாலையில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மைக் செட்டு மற்றும் கொடிகள் அமைத்து கொடுத்து உள்ளார். மேலும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் அங்கு இருந்த கொடிகளை அகற்ற முயற்சித்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கனிராஜ் தூக்கி வீசப்பட்டார். மேலும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நிலையில் கனிராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை கொண்டு சென்றனர்.

அப்போது அங்கு இருந்த மருத்துவர் கனிராஜை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற மேற்கு காவல் நிலைய போலீசார் கனிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News