யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆழ்வார் திருவடி தொழுதல் உற்சவம்
யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆழ்வார் திருவடி தொழுதல் உற்சவம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-16 13:54 GMT
உற்சவம்
பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் கோமளவல்லி தாயார் சமேத யதோக்தகாரிபெருமாள் கோவிலில், மார்கழி மாத ஆழ்வார் திருவடி தொழுதல் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. உற்சவத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது.
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ யதோக்த்தகாரி பெருமாள் திவ்ய அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது."