ஆத்தூர் : விளம்பர பேனர்களால் மறைக்கப்பட்ட சிசிடிவி கேமரா
ஆத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் போக்குவரத்து காவல்துறை அருகில் உள்ள CCTV கேமராவை மறைத்து விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.;
Update: 2024-03-27 08:40 GMT
ஆத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் போக்குவரத்து காவல்துறை அருகில் உள்ள CCTV கேமராவை மறைத்து விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகம் அருகில் ஆத்தூர் போக்குவரத்து துறை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதமாக அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ள நிலையில் CCTV கேமராவினை மறைத்து விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய வளைவு பகுதி மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதை உணராமல் கூட விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விளம்பர பேனர்களை வைத்த நபர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து அபாராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலரும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.