குமரி சிறுமிகளிடம் சில்மிஷம்: வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை

குமரி சிறுமிகளிடம் சில்மிஷம்: வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை. கோர்ட் உத்தரவு.

Update: 2024-04-17 02:24 GMT

சிறை 

கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் தாசன் (55). பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அவரது  கடைக்கு சென்ற 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் படிக்கும்  இண்டு சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் இது தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு பாதுகாப்பு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தாசனை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி ஜோசப்ஜாய் நேற்று தாசனுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும், ரூபாய்  40 ஆயிரம்  அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்டத் தவறினால்  மேலும் 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News