ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி சார்பில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி;
By : King 24x7 Website
Update: 2023-10-30 09:45 GMT
உறுதிமொழி ஏற்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி சார்பில் கணக்காளர் பிரேமா தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். உறுதி மொழியில் நமது நாட்டின் பொருளாதாரம் அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன் என்பதை நான் அறிவேன் எனவே நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும் லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவே மாட்டேன் என்றும் அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்த வேண்டும் பொது மக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும் தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்றனர்.