உளுந்தூர்பேட்டை மறுவாழ்வு இல்லத்தில் உறுதிமொழி ஏற்பு !
அரசு மறுவாழ்வு இல்லத்தில் லோக்சபா பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-01 04:53 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் வெள்ளையூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் லோக்சபா பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கள்ளக்குறிச்சி தொகுதியில் வரும் ஏப்.19-ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவிப்பின்படி, அனைவரும் தவறாமல் ஓட்டளிப்பதென உறுதிமொழி ஏற்றனர்; மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் மற்றும் மறுவாழ்வு இல்ல காப்பாளர், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.