மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வருகை !
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுலபமாகஓட்டுச் சாவடிக்கு சென்று வர, வீல் - சேர்கள் ஏற்பாடுசெய்ய முடிவு செய்யப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-04-16 05:46 GMT
தமிழகத்தில் லோக்சபா தேர்தல், வரும் 19-ம் தேதி நடக்க உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துவருகிறது. காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட செய்யூர் சட்டசபைதொகுதியில், 263 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஏற்கனவே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னங்கள் மற்றும் பெயர்கள் பொருத்தப்பட்ட நிலையில், ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், 85 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுலபமாகஓட்டுச் சாவடிக்கு சென்று வர, வீல் - சேர்கள் ஏற்பாடுசெய்ய முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, முதற்கட்டமாக நேற்று, 150 வீல் சேர்கள் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தது. வரும் 18-ம் தேதி ஓட்டுச்சாவடி மையங்களுக்கு வீல் சேர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.