ஆம்பூர் அருகே விபத்து
ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையின் தடுப்பு வேலியை உடைத்து விபத்து
Update: 2024-02-01 08:46 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையின் தடுப்பு வேலியை உடைத்து மற்றொரு சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து ம்ற்றும் மற்றொரு லாரி மீது மோதி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேருந்து பயணிகள் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பிஸ்கட் ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கி பிஸ்கட் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலிகளை உடைத்து எதிர்சாலையில் வந்து பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மற்றும் ஓசூரில் இருந்து சென்னையிற்கு பார்சல்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் மீது மோதி சாலையின் நடுவே தலைகீழாக கவிழந்தது விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் பார்சல் லோடு ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் சிவாஜி என்பவர் படுகாயம் அடைந்த நிலையில், அவரை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சொகுசு பேருந்தில் சென்ற பயணிகள் எவ்வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கோண்டு வருகின்றனர். மேலும் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது..