பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்

காய்ந்த மரங்கள் மழை காலத்திலோ அல்லது பலத்த காற்று வீசும்போதோ முறிந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது.

Update: 2024-02-29 10:13 GMT

பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்

திண்டுக்கல் நத்தம் சாலையில் இருபக்கமும் ஏராளமான மரங்கள் உள்ளன. இதில் முதிர்ச்சி அடைந்து வளர்ச்சி இல்லாமல் பட்டுப்போன மரங்கள் சில இடங்களில் காணப்படுகின்றன. இந்த காய்ந்த மரங்கள் மழை காலத்திலோ அல்லது பலத்த காற்று வீசும்போதோ முறிந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே விபத்து ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல்லை அடுத்த விராலிப்பட்டி பிரிவில் உள்ள பட்டுப்போன மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News