இளம் பெண்களை கற்பழித்த வழக்கில் குற்றவாளி கைது !

திண்டுக்கல் அருகே காதலர்களை கட்டிப்போட்டு கத்தி முனையில் 2 இளம் பெண்களை கற்பழித்த வழக்கில் தலை மறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-08 10:55 GMT

கைது

திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 19 மற்றும் 17 வயது சகோதரிகளை தாமரைக்குளம் பகுதியில் சகோதரிகளின் காதலர்களை கட்டி போட்டு கத்தி முனையில் 2 சகோதரிகளையும் கற்பழித்த சரண்குமார், வினோத்குமார், சூரிய பிரகாஷ் ஆகிய 3 பேரும் கைது செய்தனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி திண்டுக்கல் பொன்னுமாந்துறை பகுதியை சேர்ந்த சுள்ளான் (எ) பிரசன்னாவை இன்று சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News