கால் ஏக்கர் பதிவு செய்ய லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு

கொடைக்கானல் சார் பதிவாளர் விவசாய நிலங்களையும் சாதாரண சாமான்ய பொதுமக்கள் வாங்கி 25 சென்டாக (கால் ஏக்கர்) பதிவு செய்ய லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-06-22 05:42 GMT

கொடைக்கானல் சார் பதிவாளர் விவசாய நிலங்களையும் சாதாரண சாமான்ய பொதுமக்கள் வாங்கி 25 சென்டாக (கால் ஏக்கர்) பதிவு செய்ய லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர் தேசியத் தலைவர் ஹென்றி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது, கொடைக்கானலை பொறுத்தவரை பெரும்பாலான நிலங்கள் நில ஒப்படை ஆவணத்தின் வாயிலாக (DKT) சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலமாகும், இந்த நிலங்களை, கடந்த 09/11/1979-க்கு முன்பாக சம்பந்தப்பட்ட பயனாளிகள் நில ஒப்படை பெற்றிருந்தால், அந்த நிலங்களை விற்பனை செய்வதற்கு கோட்டாட்சியரிடம் முன் அனுமதி வாங்கத் தேவையில்லை என்று சென்னை நில நிர்வாக ஆணையர் கடந்த 27/03/2008 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளார்.

ஆனாலும் அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றாமல் உள்ளனர், 1979 க்கு முன் DKT பட்டா பெற்றுள்ள இடங்களில் அமைந்துள்ள நிலங்களுக்கும், கோட்டாட்சியரிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்ற நிலை தொடர்வதாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிப்பதாகவும், இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, நில நிர்வாக ஆணையர் அவர்களின் உத்தரவை ஏற்று, பொதுமக்களின் நலன் கருதி விரைந்து தீர்வு காண வேண்டும், மேலும் கொடைக்கானலில் உள்ள பெரும்பாலான பகுதிகள் மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் (HACA) எல்லைக்கு உட்பட்டது, இந்த பகுதியில் வீட்டு மனை பிரிவு அனுமதி மற்றும் கட்டிடம் கட்டிட திட்ட அனுமதி பெறுவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

மேலும் அனுமதி பெறுவதற்கு கனிமவளம், வேளாண்மை பொறியியல் துறை, வன அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் போன்றவர்களிடம் ஆட்சேபனை இன்மை கடிதம் பெற்று, பிறகு சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் வகையில் தற்பொழுது வழிவகை உள்ளது, இதனால் தடையின்மை சான்று பெறுவதில் மிகுந்த சிக்கல், சிரமம், கால தாமதம், வீண் விரையம் ஏற்படுவதால், இங்கு வீட்டுமனை வாங்குவதற்கும் வீடு கட்டுவதற்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர், தமிழக அரசும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையும் இதனை கவனத்தில் கொண்டு, ஒற்றை சாளர முறையில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும், மலைப்பகுதிகளின் அருகில் உள்ள அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில் விற்கப்படாத மனைகளை மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் அரசாணை எண் 65/2020 ஐ மேலும் 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்திட வேண்டும் எனவும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் பொது கட்டிட விதிகள் 2019 இல் உள்ள பல விதிகள் மலைப்பகுதிகளுக்கு பொருந்தவில்லை.

ஆகவே மலைப் பகுதிகளுக்கென தனியாக புதிய கட்டிட விதிகளை உருவாக்கிட வேண்டும் எனவும் கொடைக்கானல் பகுதியில் (master plan) முழுமை திட்டத்தை விரிவுபடுத்தியும், அடர்த்தியாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளையும், வணிக வளாகப் பகுதிகளையும் கண்டறிந்து தொடர் கட்டிடப் பகுதியாக (CBA) மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனைப் பிரிவு, நில வகைப்பாடு மாற்றம் மற்றும் கட்டிட திட்ட வீடு அனுமதியை பெறுவதற்கு தற்போது 28 க்கும் மேற்பட்ட துறைகளை அணுக வேண்டியுள்ளது.

இதில் சுமார் 24 துறைகள் ஒற்றைச் சாளர முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும், தாமாக கோப்புகள் நகர்வதில்லை இதற்கு கால நிர்ணயம் செய்து விரைவில் அனுமதி வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் எனவும், அதேபோன்று நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து ஒற்றை சாளர முறை திட்டத்தில் இறுதி ஒப்புதலையும் இணையதளம் வாயிலாகவே 15 தினங்களுக்குள் (AUTOMATIC APPROVAL OR DEEMED APPROVAL) வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் எனவும், தற்போது பதிவுத்துறையில் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிற நிலங்களின் மீதான அரசு வழிகாட்டி மதிப்பு குறித்த வரைவு தற்போது பதிவுத்துறை இணையதளத்தில் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கிராமப்புறங்களில் இருக்கிற பொதுமக்கள் அறிந்து கொள்ள மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். ஆகவே இந்த தகவல்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களின் வெளியில் உள்ள தகவல் பலகையில் வகைபாடு மதிப்பின் அடிப்படையில் இல்லாமல் தெரு மதிப்பு மற்றும் சர்வே எண் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயித்து, அதனை அனைத்து பொதுமக்களும் அறியும் வண்ணம் புதிய வழிகாட்டி மதிப்பு வரைவினை ஒட்ட வேண்டும்.

மேலும் கொடைக்கானலில் பெரும்பகுதி விவசாய நிலம் என்பதால் குறைந்தபட்சம் 25 சென்ட் நிலம் வாங்க விரும்பும் பொதுமக்கள் அதனை பதிவு செய்ய முடியவில்லை, சார் பதிவாளர் பதிவு துறை அமைச்சர் பெயரை சொல்லி ஏக்கருக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் லஞ்சம் தந்தால் தான் பதிவு செய்ய முடியும் என நிராகரிக்கிறார், இதனை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த தீர்வு காண வேண்டும், அதே போல ரியல் எஸ்டேட் துறை எழுச்சி பெற, கட்டுமானப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) வெகுவாக குறைத்து, ஆடம்பர தங்கத்திற்கு இணையான ஜிஎஸ்டி வரியை நிர்ணயித்தும் , pmay திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News