கடைக்குள் பஸ்ஸை செலுத்திய டிரைவர் மீது நடவடிக்கை !
திண்டுக்கல்லில் கவனக்குறைவாக பஸ் ஓட்டிய டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.;
அரசு பேருந்து
திண்டுக்கல்லில் கவனக்குறைவாக பஸ் ஓட்டிய டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.பெரியகுளம் கிளையிலிருந்து கரூருக்கு அரசு பஸ்சை டிரைவர் பழனிச்சாமி நேற்று முன்தினம் காலை 6.05 மணிக்கு ஓட்டி சென்று உள்ளார்.அங்கிருந்து திண்டுக்கல் வரை சுமார் 210 கி.மீ எந்தவித இயந்திர கோளாறு ஏற்பட வில்லை. மீண்டும் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்து தேனிக்கு மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து வெளியே செல்லும் போது, பஸ் டிரைவர் விதிமுறைகளை பின்பற்றாமல் வேகமாக இயக்கி, இடது புறம் திரும்புவதற்கு பதிலாக நேராக பஸ்சை இயக்கி ஸ்வீட் கடைக்குள் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.எனவே, பஸ் விபத்துக்கு டிரைவரின் கவனக்குறைவால் நடந்துள்ளது. விபத்திற்கு காரணமான டிரைவர் பழனிச்சாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.