தேர்தல் தொடர்பாக தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை
லோக்சபா தேர்தல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரித்துள்ளார்.;
Update: 2024-03-18 07:24 GMT
ஆட்சியர் ஷ்ரவன்குமார்
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளது. தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தலை அமைதியான முறையில் நடத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.