கட்சியினர் சமூக ஊடகங்கள் மூலமாக பிரசாரம் மேற்கொண்டால் நடவடிக்கை

கட்சியினர் சமூக ஊடகங்கள் மூலமாக பிரசாரம் மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட எஸ்பி தீபக்சிவாச் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2024-04-18 15:51 GMT

எஸ்பி அலுவலகம்

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாச் வெளியிட் டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு அமைதியான முறையில் பொதுமக்கள் எந்தவித அச்சமும், தயக்கமும் இன்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட் டத்தில் 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 51 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப் பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒரு போலீஸ்காரர் அல்லது சிறப்பு போலீசார்களால் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப் படும். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார், மத்திய தொழிற் பாதுகாப்பு படை யினர், ஊர்காவல் படையினர், ஓய்வுபெற்ற போலீசார், துணை ராணுவத்தினர் என 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில் அரசியல் கட்சியினரோ, வேட்பாளரோ தேர்தல் பிரசாரம் ஒலிப்பெருக்கி மூலமாகவோ, நேரடியாகவோ, சமூக ஊடகங்கள் மூலமாகவோ பிரசாரம் மேற்கொண்டாலோ அல்லது பதிவு செய் தாலோ தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காவல் துறையால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News