மேலூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை

தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தில் 1 வது நடைமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்  மேலூர் ரயில் நிலையத்தில் உடனடியாக நிறுத்தம் வழங்குமாறு பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-03-30 02:02 GMT

விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை

தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தில் 1 வது நடைமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேலூர் ரயில் நிலையத்தில் உடனடியாக நிறுத்தம் வழங்குமாறு பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தில் 1 வது நடைமேடையில் பராமரிப்பு பணிகள் கடந்த 15 நாட்களாக தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் பல்வேறு பணிகள், அதாவது மூன்றாவது நடைமேடை விரிவாக்கம்-சிக்னல், பிட்லைன் விரிவாக்க பணிகள் மற்றும் கூடுதல் லைன்கள் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கின்றன. தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர், லிப்ட் வசதியும் கிடையாது.

இதனால் பொதுமக்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் ரயில் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். இதைத் தவிர்க்கும் வித‌மாக, தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில், வண்டி எண் 12694 தூத்துக்குடி- சென்னை முத்துநகர் அதி விரைவு ரயில், வண்டி எண். 16235-16236 தூத்துக்குடி- மைசூர் மற்றும் மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில்களுக்கு, தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் உடனடியாக நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

Similar News