மதுரையில் நடிகர் கருணாஸ் பிரச்சாரம்
மதுரை வில்லாபுரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நடிகர் கருணாஸ் பங்கேற்று பேசினார்.
மதுரை வில்லாபுரம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் கருணாஸ் பகுதி சேனல் மாமன்ற உறுப்பினர் போஸ் முத்தையா வட்ட செயலாளர் கருணாநிதி பிரதிநிதி ராஜா மற்றும் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டனர்.
மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு வெங்கடேசனை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சியை சேர்ந்த நடிகர் கருணாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.மோடி அதானி அம்பானி விஜய் மல்லையா போன்றவர்களுக்கு 17 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். சாமானிய மக்களை பாட்டி வதைக்கிறார் 36 ஆவது இடத்தில் இருந்த இந்தியாவை பொருளாதாரத்தில் 140 வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார் மோடியின் பத்தாண்டு கால ஆட்சி பாசிசாட்சியாக தான் உள்ளது ஒரே நாடு ஒரே மதம் ஒரே உணவு என்று பாசிச கொள்கையை திணிக்கிறார்.
இந்நிலையில் மீண்டும் மோடியின் ஆட்சி வராமல் இருக்க இந்தியா கூட்டணி சார்பில்திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட மக்கள் சேவகர் சு வெங்கடேசனுக்கு அறிவியல் சின்னத்தில் வாக்களித்து விட வேண்டும் ராமர் கோவில் கட்டியதாக கூறுகிறார் 300 வருடங்களுக்கு முன்னதாகவே நாம் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கோயிலை கட்டியுள்ளனர்.
துரோகி எடப்பாடியின் செயலை முறியடிக்கவும் மத்தியில் இந்தியா கூட்டணி சேர்ப்பு ஆட்சி அமைக்கவும் மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசனுக்கு அறிவியல் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.