சேலத்தில் நடிகை குஷ்புவின் படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்
சேலத்தில் நடிகை குஷ்புவின் படத்தை எரித்து தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்;
Update: 2024-03-14 02:33 GMT
ஆர்ப்பாட்டம்
மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக கூறி நடிகை குஷ்புவை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிர் அணியின் மாவட்ட அமைப்பாளரான கவுன்சிலர் மஞ்சுளா தலைமை தாங்கினார். தொண்டரணி மாவட்ட தலைவர் அறிவழகி, அமைப்பாளர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக கூறி நடிகை குஷ்புவை கண்டித்து கோஷமிட்டனர். இதனிடையே அவரது உருவபொம்மையை மகளிர் அணியினர் எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்து உருவபொம்மையை வாங்கி எரிக்க விடாமல் தடுத்தனர். இருப்பினும் தி.மு.க. மகளிர் அணியினர் குஷ்புவின் படத்தை தீயிட்டு எரித்து கொளுத்தினர். மேலும் படத்தை காலணியாலும் அடித்தனர். இதை போலீசார் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.