தென்காசியில் நடிகா் வாகை சந்திரசேகா் பிரசாரம்

தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து நடிகா் வாகை சந்திரசேகா் பிரசாரம்

Update: 2024-04-05 02:57 GMT

வாக்கு சேகரிப்பு


தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து நடிகா் வாகை சந்திரசேகா் நேற்று மாலையில் பிரசாரம் செய்தாா். தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசுகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் காலை உணவுத்திட்டத்தை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. மத்திய அரசுக்கு நாம் ரூ.1 வரி செலுத்தினால், மாநில அரசுக்கு 29 பைசாவை மட்டுமே தருகிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசை அகற்ற ராணி ஸ்ரீகுமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா். இதில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Tags:    

Similar News