தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.

Update: 2024-06-30 09:49 GMT

மாவட்ட ஆட்சியர் 

 தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தை போக்கினால் ஏற்படும் இறப்பை தடுக்க, தீவிர வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் தர்மபுரி மாவட்டத்தில் நாளை (1ம்தேதி) முதல் ஆகஸ்ட் 31ம்தேதி வரை, இருமாத காலம் நடை பெற உள்ளது. இத்திட்டத் தின் கீழ், மாவட்டத்தில் அனைத்து 5 வயதிற்கு உட் பட்ட சுமார் 1.36 லட்சம் குழந்தைகளுக்கு, ஓஆர்எஸ் எனப்படும் இரண்டு உப்பு சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் மற்றும் 14 துத்த நாக மாத்திரைகள் வழங் கப்பட உள்ளது.

இந்த இரு மாதங்களில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங் கள்,அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள், அரசு மருத் துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகளிலும் இத்திட் டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் வயிற்றுப் போக்கினை தடுக்கும் மற்றும் சிகிச்சை முறை பற்றியும், கைகழுவும் முறை மற் றும் அதன் அவசியத்தை பற்றியும், 6 மாதத்திற்குட் பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதன் அவசியத் ததை பற்றியும், உப்பு சர்க் கரை கரைசல் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியீட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News