கள்ளக்குறிச்சியில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்
பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கள்ளக்குறிச்சியில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் பலர் சென்னையில் தங்கி பணிபுரிகின்றனர். பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வெளியூரில் தங்கி பணிபுரிந்த அனைவரும் சொந்த ஊருக்கு வந்தனர். காணும் பொங்கலான நேற்றுடன் பண்டிகை விடுமுறை முடிந்த நிலையில், இன்று (18ம் தேதி) முதல் பள்ளி, கல்லுாரிகள் அலுவலகங்கள் இயங்குகிறது.
இதையொட்டி நேற்று மதியம் 2 மணியில் இருந்து சென்னைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.கள்ளக்குறிச்சி அரசு டெப்போ 1 மற்றும் 2ல் இருந்து சாதாரண நாட்களில் சேலம் மற்றும் சென்னை வழித்தடத்தில் 13 அரசு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி பணிமனையில் இருந்து சென்னைக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. மதியம் 2 மணியில் இருந்து கூடுதலாக 5 அரசு பஸ், மாலை 7 மணியில் இருந்து 10 பஸ் என மொத்தமாக 15 அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.