அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் மாணவர்களுக்கு கூடுதல் சான்றிதழ் பயிற்சி

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் மாணவர்களுக்கு கூடுதல் சான்றிதழ் பயிற்சி நடைபெற்றது.;

Update: 2024-01-05 09:39 GMT

பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் 

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மாணவர்களுக்கு இந்திய அரசின் ஸ்வயம்-என்.பி.டி.இ.எல். நிறுவனத்தின் கூடுதல் சான்றிதழ் மற்றும் அதற்கு வழிகாட்டியாக செயல்பட்ட பேராசிரியர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலுக்கான சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:- மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியாவின் கீழ் தொடங்கப்பட்ட (ஸ்வயம்-என்.பி.டி.இ.எல்.) திட்டமானது மாணவர்களுக்கும், ேபராசிரியர்களுக்கும் பல்வேறு பாடப்பிரிவுகளை கற்பிக்கும் ஓர் இலவச டிஜிட்டல் தளமாக செயல்பட்டு வருகிறது.

Advertisement

இதன் அடிப்படையில் எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் டிஜிட்டல் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும் கூடுதல் சான்றிதழ்கள் மூலம் மென் திறனை ஊக்குவித்து சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதை நோக்கமாக கொண்டு இணைத்துள்ளோம். ஸ்வயம்-என்.பி.டி.இ.எல். நிறுவனத்தில் எங்கள் கல்லூரியையும் பதிவு செய்து இணைத்துள்ளோம்.

இதன்மூலம் எங்கள் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படித்து சான்றிதழ்கள் பெறுவதற்கு ஏதுவாக துறை பேராசிரியர்களை வழிநடத்துபவர்களாகவும் நியமித்து உள்ளோம். இதன்மூலம் சுமார் 350 மாணவிகள் படித்து சான்றிதழை பெற்றுள்ளார்கள். இது அவர்களின் மதிப்பெண் சான்றிதழிலும் பதிவு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்..

Tags:    

Similar News